Don't have an account? Sign Up
Already have an account ? Login
தம் வாயையும் நாவையும் காப்பவர் இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.
நானே உன் குற்றங்களை என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்: உன் பாவங்களை நினைவிற் கொள்ள மாட்டேன்.
ஏனெனில் நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்.
அன்புக்குரியவரே நீர் ஆன்ம நலந்தோடியிருப்பது போல் உடல் நலத்தோடு இருக்கவும் அனைத்தும் இனிதே நிகழவும் வேண்டுகிறேன்.
என் பிள்ளைகள் உண்மைக்கேற்ப வாழ்ந்து வருகிறார்களெனக் கேள்விப்படுவதைவிட மேலான பெரு மகிழ்ச்சி எனக்கு இல்லை.
நன்மை செய்வோர் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். தீமை செய்வோர் கடவுளைக் கண்டதில்லை.
தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!
ஆண்டவரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
ஆண்டவரின் அன்புக்கு உரியவன்: அவரால் அவன் பாதுகாப்புடன் வாழ்வான். எக்காலமும் அவனை அவர் அரவணைத்துக் காப்பார்: அவர்தம் கரங்களுக்கிடையே அவன் வாழ்வான்.
நீர் நினைப்பது கைகூடும்: உம் வழிகள் ஒளிமயமாகும்.